Friday, April 8, 2011

வெளிநாடு வாழ் முஸ்லிம் தமிழக சகோதர சகோதரிகளுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..!

அன்புடையீர்..! அஸ்ஸலாமு அலைக்கும்..(வரஹ்..)


வருகிற ஏப்ரல் 13-ம் தேதி தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இத்தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

வாணியம்பாடியில் - H. அப்துல் பாசித் அவர்கள்
துறைமுகத்தில் - திருப்பூர் M. அல்தாப் ஹூசைன் அவர்கள்
நாகப்பட்டினத்தில் - M. முஹம்மது ஷேக் தாவூத் அவர்கள்

ஆகியோரும், மற்றும் 231 தொகுதிகளில் தோழமை கட்சி வேட்பாளர்களும் களம் இறங்கியுள்ளனர் என்பதை தாங்கள் அறிந்ததேயாகும்.


முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு, உலமாக்கள் நலவாரியம் அமையப்பெற்றது, சமச்சீர் கல்வியில் அரபி, உருது மொழிகளில் இடம் பெற செய்தது, அதில் மதிப்பெண்கள் சான்று பெற வழிவகை செய்தது, சிறுபான்மை-சுயநிதி பள்ளிகளுக்கு ஆண்டுக்கு 331 கோடி ரூபாய் வழங்கி சிறுபான்மை சமூக ஆசிரியர்கள், ஊழியர்கள் பயனடைய செய்தது, கட்டாய திருமணப் பதிவு சட்டத்தில் திருத்தம், முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு தேர்தல் வாக்குறுதியினை பெறவும், சிறுபான்மையினருக்கு நீதிபதி திரு.ரெங்கநாத் மிஸ்ரா பரிந்துரையின் அடிப்படையில் கூடுதல் இடஒதுக்கீடு வாய்ப்பினை பெற வலியுறுத்தவும், பல்வேறு இலவச சலுகைகள், மானியங்கள், உரிமைகள் மற்றும் திட்ட பயன்களை பெறவும், மாணவ, மாணவியர்ளுக்கான கல்விச் சலுகைகள், ஆண்கள், பெண்களுக்கான அரசு நல சலுகைகள், உரிமைகளை முழுமையாக பெற்றிடவும், பல்வேறு திட்டங்களை நம் சமுதாயத்திற்கு சாதகமாக பெற்றுத் தரவும், தமிழக மக்களுக்கான முற்போக்கான பல திட்டங்கள் தொடரவும், வளர்ச்சி பாதையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழவும், மத்தியிலும் மாநிலத்திலும் ஒருங்கிணைந்த நல்லாட்சி நடைபெறவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மூன்று வேட்பாளர்களும் மற்றும் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் ஏனைய வேட்பாளர்களும் வெற்றி பெற வாக்களிக்குமாறு தாயகத்தில் தாங்கள், தங்கள் குடும்பத்தார்களுக்கும், சுற்றம் நட்புக்கும் அறிவுறுத்துமாறு மிக பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


தங்களன்புள்ள,
நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்
காயிதே மில்லத் பேரவை, குவைத்.
Website: www.qmfq8.blogspot.com


Thursday, March 17, 2011

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் தேர்வு.

நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துறைமுகம், வாணியம்பாடி, நாகப்பட்டினம் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அத்தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உயர் மட்டக்குழு கூட்டம் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் முஸ்லிம் லீக் தலைமையகமான சென்னை - 1, மரைக்காயர் லெப்பைத் தெருவில் உள்ள காயிதெ மில்லத் மன்ஸிலில் இன்று நடைபெற்றது. 3 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு.


1) துறைமுகம் - அல்தாப் ஹுசைன்


திருப்பூர் அல்தாப் என்று அழைக்கப்படும் அல்தாப் ஹுசைன் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள மாடர்ன் சிட்டி தெருவில் உள்ள 14 -ஆம் இலக்க வீட்டில் குடியிருந்து வருகிறார். இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் காலம் சென்ற பிரபலமான தலைவர் திருப்பூர் மைதீன் (முன்னாள் எம்.எல்.ஏ) புதல்வராவார்.


இவருக்கு வயது 60. மிகச் சிறந்த பேச்சாளரான இவர் தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் சரளமாக பேசுபவர். எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தவர். தற்காப்பு கலையில் பயிற்சி பெற்றவர்.


டன்லப் இந்திய கம்பெனியில் முன்னாள் ஊழியர். தடா சட்டத்தை எதிர்த்து டெல்லியில் தர்ணா செய்து திகார் சிறையில் இருந்தவர் தற்போது சமுதாய உரிமை என்ற மாத பத்திரிக்கையின் ஆரிரியராக உள்ளார். சிறந்த பொது நல ஊழியர்


2) வாணியம்பாடி - எச். அப்துல் பாசித்


வாணியம்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தற்போது பணியாற்றும் எச். அப்துல் பாசித் வேலூர் மாவட்டம் ஆம்பூர் நீலிக்கொல்லை மசூதி தெரு சந்து, 7/3 இலக்க வீட்டில் குடியிருந்து வருகிறார். டிப்ளமோ பட்டதாரியான இவருக்கு வயது 46. இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நீண்ட கால உறுப்பினர். மிகச் சிறந்த பேச்சாளர் தமிழ், ஆங்கிலம், உருது, இந்தி ஆகிய மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்தவர்.


தோல் காலணி உருவாக்கும் இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். சிறந்த பொது நல ஊழியரான இவர் தொகுதி மக்களுக்கு பல்வேறு சாதனைகளை செய்தவர். பல பொதுநல அமைப்புகளிலும் ஜமாஅத்திலும் பொறுப்பேற்று பணி செய்து வரக்கூடியவர்.


3) நாகப்பட்டினம் - எம். முஹம்மது ஷேக் தாவூது

ஆலியா ஷேக் தாவூது மரைக்காயர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் எம். முஹம்மது ஷேக் தாவூத், நாகூர் தெற்குத் தெருவில் உள்ள 34 ம் இலக்க வீட்டில் குடியிருந்து வருகிறார்.


டிப்ளமோ மெக்கானிக்கல் பொறியியல் பட்டதாரியான இவருக்கு வயது 60.


மிகச் சிறந்த பொது நல ஊழியரான இவர் நாகூர் கல்வி அறக்கட்டளையின் தலைவராகவும், கவுதியா சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இந்த ஸ்தாபனங்களின் சார்பில் ஆண், பெண் கல்வி நிலையங்கள், தர்மஸ்தானங்கள் நடைபெற்று வருகின்றன. நாகூர் மாடர்ன் மெட்ரிக் பள்ளி தாளாளராகவும் உள்ள இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் சரளமாக பேசத் தெரிந்தவர்.

Tuesday, March 15, 2011

இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு 3 தொகுதிகள்

நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சென்னை துறைமுகம், வாணியம்பாடி, நாகப்பட்டினம் ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான உடன்படிக்கையில் இன்று (15-03-2011) இரவு 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தலைவர் முதல்வர் டாக்டர் கலைஞர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.


இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் உயர் மட்டக்குழு கூட்டம் 16-03-2011 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு முஸ்லிம் லீக் தலைமையகமான சென்னை - 600001, மரைக்காயர் லெப்பைத் தெரு, 36, இலக்கத்தில் உள்ள காயிதெ மில்லத் மன்ஸில் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெறும் அக்கூட்டத்தில் மேற்கண்ட மூன்று தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Friday, March 11, 2011

குவைத் காயிதே மில்லத் பேரவையின் கண்டன அறிக்கை !

பிஸ்மில்லாஹிர்ரகுமானிர்ரஹிம்
பெறுவோர்:
   
இந்திய யூனியன் முஸ்லிம்லீக்- தமிழ்நாடு
முஸ்லிம்லீக் தலைமைஅலுவலகம்
காயிதேமில்லத் மன்ஞில்,
எண்:36, மரைக்காயர் லெப்பைதெரு
சென்னை-600001.


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)


நம் சமுதாயத்திற்கு மதிப்பளித்து முடிவெடுக்கும் தனித்திறமை தலைமைக்கு,தலைமை எடுத்த முடிவில் தலைதாழ்ந்துநிற்கும் குவைத் காயிதே மில்லத் பேரவையின் கண்டன அறிக்கை :


வருகிற தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் தாங்கள் தன்னிச்சையாக எடுத்த முடிவு என்பது; சமீபகாலமாக துளிர்விட்டு மொட்டாகி பூவாக மலர இருந்த எங்களின் சேவையில் வெண்ணீரைஊற்றி காயவைக்க நினைத்து விட்டீர்களோ..?என்று எண்ணூமளவிற்கு, தாங்கள் எடுத்த முடிவு சமுதாயத்தை அழியவைக்க, அடகுவைக்கஎண்ணூம் அடுத்தவர்களின் இந்த நிலை எங்களின் செயல்பாடுகளை முடக்க முனைந்து இருக்கிறது. குவைத்தில் உள்ள குவைத் காயிதேமில்லத் பேரவையின் முஸ்லிம்லீக் உறுப்பினர்கள் மட்டும் அல்லாது, பரவலாக குவைத்வாழ் தமிழக நம் சமுதாய மக்களின் மனதை மிக வேதனையில் ஆழ்த்தியுள்ளதுநம் சமுதாய மக்களை மதிக்காமல் தாங்கள்எடுத்த முடிவுக்கு நொண்டிசாக்குகள் ஏற்றுகொள்ள கூடியதாக இல்லை..!!!


மூன்று சீட்டுகளை பெற்று ஒரு சீட்டினைஅவர்கள்கேட்டுக் கொண்டதற்கிணங்க விட்டுவிட்டதுடன், இரண்டுபோதும் என்று, அன்புக்கு ஒன்று, ஆசைக்கு ஒன்று என்றும் குடும்பகட்டுப்பாடு கொள்கைபோல்,சமுதாயத்தை கேவலப்படுத்துவதற்கு பதிலாக, பெற்ற மூன்றையும் அவர்களிடமே(திமுகவிடம்) கொடுத்துவிட்டுநாங்கள் வெளியிலிருந்துஆதரவு,  கூட்டணியினின் வெற்றிக்கு. பாடுபடுவது என்றநிலை எடுத்திருந்தால்..:


நம் சமுதாயத்தின்,தாய்சபை(லீக்)னரின் ஒட்டுமொத்த பாரட்டுனையும்அங்கீகாரத்தையும் பெற்று முஸ்லிம்லீக் தனிதன்மையுடனும், லீக்கின் எதிர்வரும்காலம் பலமான தளமாகவும்,களமாகவும் அமைய பெறுவதுடன் தன்மான காத்த(சிங்கமாக) தலைமையாக விளங்கிருப்பீர்கள்..?! அப்படியொரு தலைமையாக வரவேண்டும் என்றும் நம்முஸ்லீம்லீக்கையும், சமுதாயத்தையும் கட்டிகாக்கும் அவர்அரனாக வரவேண்டும் என்றும் ஆசைபடுகிறோம், அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். நம் சமுதாயத்தின், கட்சி(லீக்)யின் தன்மானம் காக்க மேலும் ஒரு பணிவான வேண்டுகோள்:- எதிர்வரும் காலத்தில் தமிழக முஸ்லிம் சமுதாயம் நலம் பல பெற்றிடவும்,வேற்றுமையில்ஒற்றுமைக் கண்டு நம்தாய் சபையில்அனைவரும் ஒர்அணியில் திரண்டிடவும்அதன் முலம் நம் தாய்சபை முஸ்லீக் தமிழகமக்களின் பிரதிநிதித்துவ சபை இது ஒன்றே என்ற நிலைபாடு உருவாகவும், அமைந்திட வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைப்பதுடன் தமிழக முஸ்லிம்லீக் தலைமையை (மனம் புண்படாமல்) மாற்றுவதுடன், உத்வேகமும், விவேகமும், சீரியபண்பும்கொண்ட புதிய தலைமையினை  உடனடியாக தேர்ந்தெடுக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 


நன்றி வஸ்ஸலாம்..!
தங்களன்புள்ள,
காயிதேமில்லத்பேரவை
குவைத்.


Friday, March 4, 2011

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 64-வது நிறுவன தினம்: பேராசிரியர் தலைமையில் பிரமாண்ட விழா..

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 64-வது நிறுவன தினம்: பேராசிரியர் தலைமையில் மார்ச் 10-ல் சென்னை திருவல்லிக்கேணியில் பிரமாண்ட விழா துரைமுருகன், தங்கபாலு, ஜி.கே.மணி, திருமாவளவன் பங்கேற்கின்றனர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 64-வது நிறுவன தினமான மார்ச் 10-ம் தேதி வியாழக்கிழமை சென்னை சேப்பாக்கம் வாலாஜா பள்ளி எதிரில் உள்ள சி.எம்.கே. சாலையில் பிரம்மாண்டமான விழா பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெறுகிறது. இதில் அமைச்சர் துரைமுருகன், கே.வீ. தங்கபாலு, ஜி.கே. மணி, திருமாவளவன் உள் ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின் றனர்.

இவ் விழாவில் சிறந்த கல்வியாளருக்கான விருது பி.எஸ். அப்துர் ரஹ்மான் அப்துல் காதர், சிறந்த இலக்கியவாதிக்கான விருது பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர், சிறந்த சமூக சேவகருக்கான விருது டாக்டர் சையத் கலீபத் துல்லாஹ் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வருடாந்திர சேவை திட்டங்களாக மார்ச் 10 நிறுவன தினம், ஜூன் 5 காயிதெ மில்லத் பிறந்த நாள், கல்வி எழுச்சி நாள், அக்டோபர் 4 சிராஜுல் மில்லத் பிறந்த நாள் - சமய நல்லிணக்க விருது வழங்கும் நாள், டிசம்பர் 30 மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு தினம் என அனுசரிக்கப் பட்டு வருகிறது.

இ.யூ. முஸ்லிம் லீக்

நிறுவன நாள் 1948-ம் வருடம் மார்ச் மாதம் 10ம் தேதி சென்னை ராஜாஜி மண்டபத்தில் கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்க ளால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துவக்கப்பட் டது. அதனை நினைவு கூரும் வகையில் ஒவ் வொரு ஆண்டும் மார்ச் மாதம் 10-ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினம் அனுஷ்டிக் கப்படுகிறது.

கடந்த ஆண்டு இந் நாளை முன்னிட்டு நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட் டன. அதில் மத்திய உரம் மற்றும் ரசாயன அமைச் சர் மு.க. அழகிரி பங்கேற் றார்.

அதற்கு முந்தைய ஆண்டு சென்னை கலை வாணர் அரங்கில் இந் நாளை முன்னிட்டு மறைந்த நம் தேசியத் தலைவர் குலாம் மஹ்மூது பனாத்வாலா நாடாளு மன்றத்தில் ஆற்றிய அற்புத மான உரைகள் ஆங்கி லத்தில் தொகுக்கப்பட்டு அது நூலாக வெளியிடப் பட்டது.

நம் தேசியத் தலைவர் இ. அஹமது, தமிழக அமைச் சர் ஆற்காடு வீராசாமி, தி.க. தலைவர் கி. வீரமணி, காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விருதுகள்

இந்த ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 64-வது நிறுவன தினத்தை முன்னிட்டு சென்னையில் நிகழ்ச்சிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வரு கின்றன. 

இந்த ஆண்டு `சிறந்த கல்வியாளருக்கான விருது� பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக் கழகத்தின் வேந்தர் அப்துர் ரஹ்மான் அப்துல் காதருக்கும், `சிறந்த இலக்கியவாதிக்கான விருது� காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயருக் கும், `சிறந்த சமூக சேவக ருக்கான விருது� மருத்துவ மாமேதை டாக்டர் செய்யது கலீபத்துல்லாஹ் சாஹிபுக்கும் வழங்கப்படு கிறது. 

10-3-2011 அன்று மாலை சரியாக 5 மணிக்கு சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள வாலாஜா மஸ்ஜித் காயிதெ மில்லத் நினைவிடத்தில் ஜியாரத் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து அப் பள்ளியின் எதிரில் உள்ள சி.என்.கே. சாலையில் பிரம்மாண்ட விழா நடை பெறுகிறது. 

பங்கேற்போர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் மாநில துணைத் தலைவர் கள், மாநிலச் செயலாளர் கள், மாநிலப் பொருளா ளர் முன்னிலையில் நடை பெறும் இப் பொதுக்கூட் டத்தில் தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், தமிழக சட்ட அமைச் சருமான துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு, பாட் டாளி மக்கள் கட்சி தலைவர் கோ.க. மணி, விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல். திருமா வளவன் உள்ளிட்ட தோழமை கட்சித் தலை வர்கள் சிறப்புரையாற்று கின்றனர்.

இக் கூட்டத்தில் தென் சென்னை, வடசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் வடக்கு - தெற்கு, திருவண்ணாமலை, வேலூர் கிழக்கு - மேற்கு உள்ளிட்ட மாவட்டங் களின் செயல் வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தென் சென்னை மாவட்டத் தலைவர் கே.பி. இஸ்மத் பாஷா, செயலாளர் பூவை முஸ்தபா, பொருளாளர் மடுவை எஸ். பீர் முஹம் மது, சேப்பாக்கம் பகுதி செயலாளர் ஆலம்கான் உள்ளிட்ட நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர். 

மேற்கண்ட தகவலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூ பக்கர் தெரிவித்துள்ளார்.
 

Thursday, February 24, 2011

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுக் குழு கூடியது இயக்கம், சமுதாயம், அரசியல் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்

இந்திய யூனியன் முஸ் லிம் லீகின் மாநில பொதுக் குழு கூட்டம் மாநில தலை வர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமை யில் இன்று கூடியது.

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ள இந்த பொதுக் குழு கூட்டத்தால் நாகூர் நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. இயக்கம்-சமுதாயம் அரசியல் தொடர்பான பல முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்படவுள்ள இந்த பொதுக்குழு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள் ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:

நாகூர் நகரம் விழாக்கோலம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில பொதுக்குழு கூட்டம் நாகப்பட்டினம் மாவட் டம் நாகூர் மாடர்ன் மெட்ரிகுலேசன் பள்ளி வளாகத்தில் இன்று 24.2.2011 காலை 10.30 மணி யளவில் தொடங்கியது.

மாநில பொதுக்குழுவை ஒட்டி நாகூர் நகரமே விழாக் கோலம் பூண்டுள் ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 1,176 பொதுக்குழு உறுப் பினர்கள் பங்கேற்றுள்ள இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை வகித்தார். மௌ லவி ஏ.கே.எஸ். இப்ராஹிம் கலீலுல்லாஹ் பைஜி இறை மறை (கிராஅத்) ஓதி நிகழ்ச்சியை தொடங் கிவைத்தார்.

இரங்கல் தீர்மானம்
இந்திய யூனியன் முஸ் லிம் லீகிற்காக பல்வேறு சேவைகளை ஆற்றி சமு தாய முன்னேற்ற காரியங்களில் ஈடு பட்டு மறைந்த பெருமக் களுக்கு இரங்கல் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.

மறைந்தவர்களின் சிறப்புகள் குறித்து தலை வர் பேராசிரியர் உருக்கத்து டன் எடுத்துரைத்தார். அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க மாநில மார்க்க அறிஞர் அணி செய லாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் துஆ ஓதினார்.

மூன்றாண்டு சாதனை
இந்திய யூனியன் முஸ் லிம் லீக் 2.2.2008 முதல் 22.2.2011 முடிய உள்ள மூன்றாண்டு காலத்தில் இயக்கம் ஆற்றிய பணிகள் குறித்த இயக்க செயல் பாடுகள் குறித்து அறிக்கை யினை மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் தாக்கல் செய்தார்.

மாநில மாநாடு அறிக்கை
தொடர்ந்து 2010 டிசம் பர் 11 அன்று தாம்பரத் தில் நடைபெற்ற இந்திய யூனி யன் முஸ்லிம் லீகின் மாநில மாநாடு தொடர்பான அறிக்கையினை மாநாட்டு விழா குழு தலைவரும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். அப்துல் ரஹ்மான் தாக்கல் செய்தார்.

மஹல்லா ஜமாத்
அதனைத் தொடர்ந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில மஹல்லா ஜமாத் ஒருங்கிணைப்பு கருத்தரங்கம் தொடர்பான அறிக்கையினை மாநில செயலாளர் கமுதி பஷீர் தாக்கல் செய்தார்.

வரவு செலவு
அதனைத் தொடர்ந்து 1.9.2008முதல் 31.1.2011 வரை யிலான மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரவு-செலவு தொடர்பான அறிக் கையினை மாநில பொரு ளாளர் வடக்கு கோட்டை வ.மு. செய்யது அஹ்மது தாக்கல் செய்தார்.

மேற்கண்ட அறிக்கை களை பொதுக்குழு உறுப் பினர்கள் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக தக்பீர் முழக்கங்கள் எழுப்பி ஒப்பு தல் வழங்கினர்.

இயக்க தீர்மானம்
தொடர்ந்து நடை பெற்ற நிகழ்ச்சியில் இயக் கம் தொடர்பான கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

1. இந்திய யூனியன் முஸ் லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர் அவர்கள் சமர்ப்பித்த 02.02.2008 முதல் 22.02.2011 முடிய உள்ள அறிக்கையை இக்கூட்டம் அங்கீகரிக்கி றது.

2. 01.09.2008 முதல் 31.01.2011 முடிய தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கையை இக்கூட்டம் அங்கீகரிக்கிறது.

3. இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு உறுப்பி னர்கள் சேர்க்கப்பட்டு, பிரைமரிகள்அமைக்கப்பட்டு மாவட்ட நிர்வாக தேர்தல் களும் முடிந்த 1. காஞ்சிபுரம்

2. தூத்துக்குடி 3.திருவள் ளூர் 4.மதுரை புறநகர் 5. கரூர் 6. விருதுநகர் 7. திருப் பூர் மாநகர் 8. பெரம்பலூர் 9. தேனி 10. நாகை வடக்கு 11. தஞ்சை 12. திருவாரூர் 13. கடலூர் 14. மதுரை மாந கர் 15. இராமநாதபுரம் 16. சிவகங்கை 17. திண்டுக்கல் 18. நீலகிரி 19. கோவை மாந கர் 20. கோவை புறநகர் 21. திருவண்ணாமலை 22. திருப்பூர் புறநகர் 23. ஈரோடு மாநகர் 24. சேலம் 25. திருச்சி மாநகர் 26. திருச்சி புறநகர் 27. திருநெல் வேலி 28. நாகை தெற்கு 29. ஈரோடு புறநகர் 30. தென் சென்னை 31. தருமபுரி 32. கிருஷ்ணகிரி 33. விழுப்புரம் மேற்கு 34. விழுப்புரம் கிழக்கு 35. வடசென்னை 36. வேலூர் மேற்கு 37. வேலூர் கிழக்கு ஆகிய மாவட்டங் களின் தேர்தல்களை இப் பொதுக்குழு அங்கீகரிக்கி றது.

4.இதுவரை மாவட்ட தேர்தல்கள் நடைபெறா மல் இருக்கின்ற 1. கன்னி யாகுமரி 2. நாமக்கல் 3. புதுக்கோட்டை 4. அரிய லூர் ஆகிய மாவட்டங் களில் விரைவாக தேர்தல் களை நடத்தி முடிக்க வேண்டுமென சம்மந்தப் பட்ட மாவட்ட நிர்வாகி களை இக்கூட்டம் கேட் டுக் கொள்கிறது.

5. வரும் 2011 ஜூன் 5-ஆம் தேதி சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில புதிய பொதுக்குழு கூட் டத்தை கூட்டி புதிய நிர் வாகிகளை தேர்ந்தெடுப்பதென்று இக்கூட்டம் முடிவு செய்கிறது.

6. தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் தொடர் பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை கள், தோழமை கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்துதல் வேட்பாளர்களை தேர்வு செய்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ள தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களுக்கு இக்கூட்டம் அதிகாரம் அளிக்கிறது.

7. கடந்த 11.12.2010 அன்று சென்னை தாம்பரத் தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு எல்லா வகையிலும் சிறப்புடன் அமையும் வகையில் வர லாறு படைத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்...

இம்மாநாட்டின் வெற்றிக்கு உழைத்த மாநில மாவட்டங்கள் மற்றும் பிரைமரிகளின் நிர்வாகி கள், அணிகளின் பொறுப் பாளர்கள், இந்திய யூனி யன் முஸ்லிம் லீக் செயல் வீரர்கள், அனைவருக்கும் மாநாட்டிலும் மஹல்லா ஜமாஅத் கருத்தரங்கிலும் பிறைக்கொடி பேரணியி லும் பங்கு கொண்டு சிறப் பித்த சமுதாய பெருமக்கள், சங்கைக்குரிய ஆலிம்கள், மஹல்லா ஜமாஅத் நிர்வா கிகள் அனைவருக்கும் இப் பொதுக்குழு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், சமுதாயம் மற்றும் அரசியல் தொடர் பான பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற் றப்படும் வகையில் பொதுக்குழு கூட்டம் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.

Saturday, February 12, 2011

குவைத் காயிதேமில்லத் பேரவையின் நன்றி நவிலும்மடல்.,

பிஸ்மில்லாஹிர்ரகுமானிற்ரஹிம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு
கோரிக்கை ஏற்று முதல்வர் ஆணை!
குவைத் காயிதேமில்லத் பேரவையின்
நன்றி நவிலும்மடல்:
=====================================
கடந்த 2010 டிசம்பர் 11-ஆம் தேதி சென்னை,தாம்பரம் ரயில்வே மைதானத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டு தீர்மானத்தை அம்மேடையிலேயே ஏற்று கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர், சமச்சீர்கல்வியில் உர்து,
அரபி, மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஆகிய மொழிகளில் பாடங்கள்இடம் பெறவும் தேர்வுகள் நடத்தவும்,மதிப்பெண்கள் வழங்கவும்,15-12-2010 அன்று ஆணை பிறப்பித்துள்ளார்.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாட்டில் அறிவித்ததை நடைமுறைப்படுத்த இந்த அரசாணைபிறக்கப்படுவதாகவும் இந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரலாறுபடைத்த இம்மாநாட்டில்14 தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. அவைகளில் பலவற்றை மேடையிலேயே ஏற்று கொண்ட முதல்வர் கலைஞர்,வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நலவாரியம்அமைக்கப்படும் அலிகர்பல்கலைக்கழகக்கிளை தமிழகத்தில் அமைக்க முயற்ச்சிக்கப்படும்; முஸ்லிம்களுக்கு10-சதவிகித இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்” என்ற அறிவிப்பையும் வெளிட்டார்.


‘முஸ்லிம் லீக் செல்லும் வழியே சமுதாயம் செல்லும் வழி’ என்பது மீண்டும் நிருபிக்கப்பட்டுள்ளது. முதல்வர் கலைஞரின் அறிவிப்பிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக தலைவர் மதிப்பின்மிகு “முனீருல்மில்லத்” பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், மாநில ‘முஸ்லிம் லீக் மாநாட்டு கோரிக்கையாகிய தமிழ்நாட்டில் முஸ்லிம் களுக்குதனிஒதிக்கீடு உயர்த்தப்படும் இதனைமுழுமையாக சமுதாயத்தை சென்றடையகடந்த10-02-2011ல்அரசுதலைமைசெயலாளர் அவர்கள் கீழ் குழுஒன்றை அமைத்து கலைஞர் உத்தரவிட்டுள்ளார்.


மேலும், இந்தியயூனியன் முஸ்லிம் லீக் மாநிலமாநாட்டுதீர்மானத்திற்கு சட்டவடிவம் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு உதவி நல வாரியம் தமிழக சட்டப்பேரவையில் மசோதாதாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மேற்கண்டதீர்மானத்திற்கும் திட்டவடிவத்திற்கும் பெறும் முயற்ச்சி மேற்கொண்ட தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே. எம் .காதர்மொகிதீன்சாஹிப் அவர்களுக்கும்,தமிழகமுஸ்லீம் லீக் முக்கிய பிரமுகர்கள், மற்றும் இதற்காக பாடுபட்ட தலமைமைநிலைய நிர்வாகிகளுக்கும்`மிக நன்றிதனை தெரிவித்துக் கொள்வதுடன், அவையாவையும் மாநில முஸ்லிம் லீக் யின் வழி மொழிந்து,


மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கும்,துணைமுதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும்,
குவைத் காயிதே மில்லத் பேரவை சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.இதனை நாளாது தேதி: 11-2-2011 அன்று குவைத் மிர்காப் தஞ்சை ஹோட்டலில் நடைபெற்ற பேரவையின் சிறப்பு கூட்டத்தில் நன்றி அறிவிப்பு தீர்மானம் நிறைவேற்றி மகிழ்கிறோம்.
என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி.. வஸ்ஸலாம்..!

தலைவர்,
R.M.முஹம்மது பாருக் & நிர்வாகிகள்
காயிதே மில்லத் பேரவை குவைத்.

தீர்மானத்தொகுப்பு: கம்பளி A.முஹம்மதுபஷீர்
                                                               சோழபுரம் I. ஜாஹீருதீன்

காயிதே மில்லத் பேரவை - குவைத் சிறப்பு கூட்டம்


அன்புடையீர்..! அஸ்ஸலாமு அலைக்கும்

அல்லாஹுவின் அளப்பெரும் கிருபையினால் தேதி:11-02-2011வெள்ளிக்கிழமை மாலை 7:00 மணி யளவில் குவைத் மிர்காப் தஞ்சை ஹோட்டலில் மர்ஹூம் சிராஜீல் மில்லத் அரங்கில் காயிதே மில்லத் பேரவை குவைத் சார்பாக புதிய நிர்வாகிகள் & உறுப்பினர்கள்அடையாள அட்டை வழங்குதல், மற்றும் கலந்துரையாடல் நிகழ்வுகள் கூட்டம் நடைபெற்றது.

இச்சிறப்பு நிகழ்வுக்கு பேரவை தலைவர் முஹம்மது பந்தூர் R.M. முஹம்மது பாருக் தலைமை தாங்கினார். மார்க்கப் பிரிவு செயலாளர் மெளலவி வல்லம் நாசர் சாதிக் ரப்பானி அவர்கள் கிராத் ஒதி தொடங்கி வைத்தார். திருமங்கலக்குடி அப்துற்ரஹிம் தனது வரவேற்புரையில் உறுப்பினர் சேர்ப்பு பணிகள் குறித்து விளக்கம் அளித்து அழைப்பு விடுத்தார்.

பேரவைத் தலைவர் பாருக் அவர்கள் தனது தலைமை உரையில் குவைத்தில் நீண்ட காலமாக இப்பேரவை மறைமுகமாகவும், நேரிடையாகாவும் ஆற்றி வருகிற சேவைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

முஸ்லிம் லீக் நமது தாயகத்தில் குறிப்பாக தமிழகத்தில் செய்து வருகிற அரிய பல சேவைகள் குறித்தும் அதன் மூலம் சமுதாயம் அடைந்து வருகிற அளப்பெரிய நன்மைகள் பற்றி நீண்ட பட்டியலிட்டார். மேலும், அனைவரும் ஒன்றுப்பட்டு நமது தாய்ச்சபையை வலுப்படுத்த வேண்டும்  என பேரவையின் முதன்மை நிலை செய்தி தொடர்பாளர் அய்யம்பேட்டை கம்பளி பஷீர் அவர்கள் அழைப்பு விடுத்தார்.

பேரவை ஆலோசகர் கூத்தாநல்லுர் N.A.M. அப்துல் அலிம் அவர்கள் பல்வேறு அமைப்புகளுக்கிடையே முஸ்லீம் லீக் இயக்கம் பாரம்பரியமிக்கதும் பண்பட்டதும், ஆராவாரமில்லாது ஆற்றி வரும் செயல்கள், மாநாட்டு தீர்மானங்களை நினைவு கூர்ந்தார். TVS அலாவுதின் அவர்கள் பேரவையின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.

11-12-2010 முஸ்லிம் லீக் மாநில மாநாட்டு தீர்மானங்கள் மற்றும் மஹல்லா ஜமாத் மாநாட்டு தீர்மானங்களை இணைச்செயலாளர் சத்திரமனை
ஹஸன் முஹம்மது வாசித்து அளித்தார்.

பேரவையின் புதிய ஆலோசகர்கள் அறிமுகத்தை தொடர்ந்து,     உறுப்பினர்கள் அடையாள அட்டையை பேரவையின் ஆலோசகர் மற்றும் தலைவரும் இணைந்து வழங்கி கெளரவித்தார்கள்.

இணைச் செயலாளர் ஹஸன் முஹம்மது நன்றியுரை வழங்கினார். பேரவையின் பெருளாளர் காரைக்கால் S.M. ஆரீப் மரைக்காயர் இக்கூட்டத்தினை தொகுத்து வழங்கி இந்நிகழ்வுக்கு சிறப்பு சேர்த்து உதவினார். பேரவையின்  நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்த்தர்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துக் கொண்ட இக்கூட்டம் மஜ்லிஸ் துவாவுடன் இனிதே நிறைவுற்றது.

செய்தி மற்றும் புகைப்படத் தொகுப்பு:  
        கம்பளி முஹம்மது பஷீர்
                                              சோழபுரம் ஜாஹிருதீன்
                                              சுவாமிமலை ஜாஹிர்  ஹூசைன்

































Wednesday, February 9, 2011

இமயம் தொலைக்காட்சி வாதம் விவாதம் நிகழ்ச்சி


வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அறிவுச்சுடர்
அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் எம்.ஏ.


த.மு.மு.க மாநில பொதுச்செயலாளர்
 ஜ‌னாப். ஹைதர் அலி

இமயம் தொலைக்காட்சி வாதம் விவாதம் நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அறிவுச்சுடர் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான் எம்.ஏ.அவர்களும் த.மு.மு.க மாநில பொதுச்செயலாளர் ஜ‌னாப். ஹைதர் அலி அவர்களும் பங்கேற்கும் வாதம் விவாதம் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 12 .02 .11 .சனிக்கிழமை இரவு 9 :30 .மணிக்கும் / 13 .02 .11 .ஞாயிறு காலை 8 :30 .மணிக்கும் இமயம் தொலைக்காட்சியில்  ஒளிப்பரப்பப்படுகிறது.
  
காண‌த்த‌வ‌றாதீர்க‌ள் !
 
Don't miss it !!