Friday, January 21, 2011

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின்பெயரை தவறாக பயன்படுத்தும் போலிகள் ஜாக்கிரதை! - நன்றி காயிதெ மில்லத் நன்பணி மன்றம் - சென்னை - 1

இந்திய முஸ்லிம்களின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பேரியக்கம் தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக். �இந்திய முஸ்லிம்களின் வரலாற்று தொடர்ச்சியே இந்திய யூனியன் முஸ்லிம் லீக்� என கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாகிப் அடிக்கடி குறிப்பிடுவார்கள். நூற்றாண்டு வரலாற்றில் பல சோதனைகளை கடந்து இன்றளவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து தன் பணிகளை ஆற்றி வரும் பேரியக்கமாகும். அவ்வப்போது இயக்கத்தின் பெயரால் குழப்பம் ஏற்படுத்தியும், இயக்கத்தின் தலைவர்களை வஞ்சித்தும் வந்த நயவஞ்சகர்களின் முகத்திரையை கிழித்தெறிந்து வெற்றி நடைபோடும் பேரியக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பதை சமுதாயம் நன்கு அறியும்.

சென்ற 11-12-2010 சென்னை தாம்பரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு எழுச்சியோடும். வரலாறு படைக்கும் வகையிலும் நடந்தேறியது அல்ஹம்துலில்லாஹ்! மழை காலமாக இருக்கின்றது - முதல்வர், தேசிய தலைவர்கள், தாய்ச்சபையின் வெளிமாநில தலைவர்கள் வருவார்களா? என பலரும் தயங்கி கொண்டிருந்த நேரத்தில், தமிழகத்தில் முஸ்லிம் லீக் அமைப்பு உள்ள 42 மாவட்டங்களிலிருந்தும் வெள்ளமென தொண்டர்கள் குவிந்தனர். காலை நிகழ்ச்சியில் மஹல்லா ஜமாஅத்தினரும் உலமா பெருமக்களும் திரளாக பங்கேற்றனர். மாலை 6.30 மணிக்கு மாநாட்டிற்கு வர வேண்டிய தமிழக முதல்வர் அவர்கள், துணை முதல்வர், உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற - பாராளுமன்ற உறுப்பினர்கள் 5.45 மணிக்கே மேடைக்கு வந்து சிறப்பித்தனர். தாய்ச்சபையின் தேசிய நிர்வாகிகள். காஷ்மீர் முதல் கேரளா வரை உள்ள 20 மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். உலகெங்கிலும் வாழக்கூடிய முஸ்லிம் லீகர்களின் அமைப்பான காயிதெ மில்லத் பேரவை நிர்வாகிகள் 10 நாடுகளிலிருந்தும் பங்கேற்று சிறப்பித்தனர்.

மாநாடு ஏதோ சம்பிரதாயத்திற்கு நடந்தது என்று இல்லாமல் முஸ்லிம் சமுதாய நன்மைக்கு மஹல்லா ஜமாஅத்துக்களின் மேன்மை பேசப்பட்டது, சமுதாயத்தின் கோரிக்கைகள் ஆட்சியாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டு, அவை மாநாட்டு மேடையிலேயே ஏற்றுக் கொள்ளப்பட்டன. சமச்சீர் கல்வி முறையில் உர்து, அரபி உள்ளிட்ட சிறுபான்மை மொழிகளுக்கு அங்கீகாரம், வெளிநாடுவாழ் தமிழர்களுக்கான நல வாரியம், சிறுபான்மையினர் நடத்தி வரும் கல்வி நிலையங்களின் 1991 முதல் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் வழங்க வேண்டும் போன்ற மாநாட்டு தீர்மானங்கள் தமிழக அரசால் ஏற்கப்பட்டு இன்று நடைமுறைக்கு வந்துள்ளதாக தமிழக அரசு அறிவித்திருக்கின்றது. இப்படியாக சரித்திர - சாதனை படைக்கும் இயக்கமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திகழ்ந்து வருகின்றது. இந்த இயக்கத்திற்கு பெருமைக்குரிய தேசிய பொதுச் செயலாளராகவும், தமிழக தலைவராகவும் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களும், தேசிய தலைவராக மத்திய இரயில்வே இணை அமைச்சர் மாண்புமிகு இ. அஹமது அவர்களும் திகழ்ந்து வருகின்றனர்.

குழப்பவாதிகள்
தாம்பரத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் லீக் மாநில மாநாடு வெற்றியை பாசிச சக்திகளால் தாங்கி கொள்ள முடியவில்லை. ஆனால் நம்மில் பொறாமையின் காரணமாக தங்களின் வயிற்று பிழைப்பிற்காக குழப்பம் செய்ய சிலர் முனைந்திருக்கின்றனர். வேலூரை சேர்ந்த ஜி.எஸ். இக்பால் என்பவர் பெயரால் துண்டு பிரசுரம் கலர் அச்சில் வெளியிடப்பட்டுள்ளது. இது போன்ற துகடாக்களின் துண்டு பிரசுரங்களுக்கு இதுவரை முஸ்லிம் லீகினர் பதில் அளித்ததில்லை. இன்று இயக்கம் வளர்ந்து பரவலாக்கப்பட்டு புதியவர்கள் பலர் நகர - மாவட்ட பொறுப்புக்களை ஏற்றிருக்கின்றனர். அவர்களில் பலருக்கு உண்மை நிலை தெரிய வாய்ப்பில்லை, எனவே விளக்கம் தெரிய வேண்டியவர்கள் இந்த பிரசுரத்தின் மூலம் தெரிந்து கொள்ளட்டும்.

பேராசிரியர் கே.எம்.கே.
சுதந்திரத்திற்கு பின் 1958 -ம் ஆண்டு திருச்சியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் ஊழியர் மாநாட்டில் கடை நிலை ஊழியராக பணியை துவக்கியவர் நமது தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சாகிப். திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் வரலாற்று துறை தலைவராக பணியாற்றியவர். அங்கு ஏழை மாணவர்களுக்காக தனி விடுதியை நடத்தியவர், ஏழை மாணவர்கள் உயர் கல்வி படிக்க உதவியர். சமுதாய மக்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க 1980 -ம் ஆண்டு தன் கல்லூரி பதவியை ராஜினாமா செய்து விட்டு சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் வேட்பாளராக போட்டியிட்டு 400 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர். அதன் பின் திருச்சியில் �தாருல் குர்ஆன்� என்ற பத்திரிக்கை துவங்கி சன்மார்க்க அரசியல் பணிகளில் ஈடுபட்டார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில இளைஞரணி அமைப்பாளர், கல்வி - கலாச்சார துறை மாநில செயலாளர், மாநில அமைப்புச் செயலாளர் என பணியாற்றி 1994 -ம் ஆண்டு மாநில பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார்.

காயிதெ மில்லத் அவர்கள் காலத்தில் கேரளாவில் மிகப்பெரும் தலைவராகவும் கேரளாவின் முதல்வராகவும் இருந்த சி ஹெச். முஹம்மது கோயா அவர்கள் கேரள சட்டமன்ற சபாநாயகராக பொறுப்பேற்க வேண்டுமென முஸ்லிம் லீக் தலைமை முடிவு செய்தது. அந்த காலத்தில் சபாநாயகர் பொறுப்பேற்பவர் கட்சியின் உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும், கட்சி சார்பற்றவராக இருக்க வேண்டும் என்பதால் கோயா சாஹிப் அப்படியே செய்தார். இதன் காரணமாக கட்சியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் காரணமாக கேரளாவில் உமர் பாபகி தங்ஙள் உள்ளிட்டவர்களால் அகில இந்திய முஸ்லிம் லீக் என்றும், நாவலர் ஏ.எம். யூசுப் சாகிப்

உள்ளிட்டவர்களால் தமிழ்நாடு முஸ்லிம் லீக் என்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இருந்த மூத்த தலைவர்கள் சிலர் வேறு இயக்கம் கண்டனர். அதன் பின் கேரளாவிலும் தமிழகத்திலும் இயக்கம் ஒன்று பட்டது. இந்த இயக்கங்கள் ஒன்றுபட காரணமாக இருந்தவரும், அதன் பின் பன்மொழிப் புலவர் எம்.ஏ. லத்தீப் சாகிப் தனி இயக்கம் கண்டபோது பல்வேறு நிலைகளில் பேசி 1991 ஆண்டு சென்னையில் ஒற்றுமை மாநாடு நடத்தியவரும் நமது பேராசிரியர் கே.எம்.கே. அவர்கள் தான்.

பேராசிரியர் முயற்சியால் தான் தமிழகத்தில் முதன் முறையாக 1989 -ஆம் ஆண்டு மதுரையில் மஹல்லா ஜமாஅத் மாநாடு நடைபெற்றது. உலகெங்கிலும் வாழும் தமிழக முஸ்லிம் லீகர்களை ஒருங்கினைக்க 1991-ம் ஆண்டு காயிதெ மில்லத் பேரவை துபையில் துவக்கப்பட்டது. பழுதடைந்த நிலையில் பலரின் ஆக்கிரமிப்பால் இருந்த சென்னை மரைக்காயர் லெப்பை தெரு முஸ்லிம் லீக் கட்டிடம் முழுமையாக இடிக்கப்பட்டு இன்று நான்கு அடுக்கு மாளிகையாக எழுப்பி அதற்கு �காயிதெ மில்லத் மன்ஸில்� என பெயர் வைத்தவர் நமது தலைவர் பேராசிரியர் கே.எம்.கே. அவர்கள்தான். மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் எம்.எல்.சி பதவியை முஸ்லிம் லீக் கட்சிக்கு கொடுக்காமல் எம்.ஜி.தாவூத் மியாகானின் தந்தை மியாகான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் வழங்கிய போது அதை புறக்கணிக்காமல் மாநில செயற்குழு கூட்டத்தில் முன்மொழிந்து கட்சியினர் அனைவரையும் ஏற்றுக் கொள்ள செய்தவர் நமது பேராசிரியர் கே.எம். கே. அவர்களே!

முஸ்லிம் லீக் வரலாற்றில் கட்சி பதவியும், எம்.பி, எம்.எல்.ஏ பதவிகளும் கட்சியில் தலைவர்களுக்கே என்று இருந்த நிலைமாறி , தான் வகித்த எம்.பி பதவி ஒரு இளைஞர் எம். அப்துல் ரஹ்மானுக்கும், பொதுச் செயலாளர் உள்ளிட்ட மாநில - மாவட்ட பதவிகளில் இளைஞர்களையும் அமர்த்திய பெருமை தலைவர் பேராசிரியர்

கே.எம். கே அவர்களையே சாரும். இப்படியாக பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் சாகிப் முஸ்லிம் லீகின் எழுச்சிக்காகவும், சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும் செய்து வருவதை பட்டியலிட்டு கொண்டே போகலாம். இவை அனைத்தையும் மறைத்து விட்டு சில சுயநல விரும்பிகள் கட்டு கதைகளை துண்டு பிரசுரமாக வெளியிட்டு வருகின்றனர்.

குற்றச்சாட்டு
இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு தமிழகத்தில் 1989 க்குப் பின் சட்டமன்ற - பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லை. தலைமை நிலையம் காயிதெ மில்லத் மன்ஸில் கட்டிட பாக்கி ரூபாய் 30 இலட்சம், மணிச்சுடர் நாளிதழ் தொடர்ந்து நடத்த முடியாத நிலை. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான்

2004-ம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் வேலூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு ஒதுக்கப்பட்டது. அனைத்து சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டு வேலூர் தொகுதியில் மாநில தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் தி.மு.க. வின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டுமென முஸ்லிம் லீக் மாநில செயற்குழு - பொதுக்குழு முடிவு எடுத்தது. அதன்படி போட்டியிட்டு 1,77,610 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மற்ற கட்சி சின்னத்தில் போட்டியிட்டால் அக்கட்சியில் உறுப்பினராக காண்பிக்க வேண்டும், இக்குற்றச்சாட்டுகளை கூறி காயிதெ மில்லத் அவர்களின் பேரன் என்று கூறிக் கொள்ளும் எம்.ஜி. தாவூத் மியாகான் தூண்டுதலில் இதே வேலூரைச் சேர்ந்த ஜி.எஸ். இக்பால், தலைவர் பேராசிரியர் கே.எம். கே. அவர்களுக்கு எதிராக 16 வழக்குகள் தொடர்ந்தார். இவை அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்திலும், டில்லி உச்ச நீதி மன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டு ஜி.எஸ். இக்பால் ரூபாய் 25,000 அபராத் தொகை வழங்க வேண்டுமென உத்தரவிட்டது. �பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் என தெரிவித்து தான் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். யாரையும் அவர் ஏமாற்றவில்லை� என்பதை உச்ச நீதி மன்ற தீர்ப்பு தெளிவுபடுத்தி இருக்கின்றது.

வேலூர் தொகுதியில் சக்தி அம்மா என்ற கோவில் நிறுவனத்தால் மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு நலப்பணிகள் நடைபெற்று வருகின்றன. வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் ஒரு நிகழ்ச்சிக்கு பேராசிரியர் கே.எம்.கே.அங்கு சென்றிருந்தார். அங்குள்ளவர்களுடன் பேராசிரியர், முஹம்மது சகி (முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்) உள்ளிட்டவர்கள் பேசிவிட்டு சென்றனர். இது தான் நடந்த உண்மை. பேராசிரியர் வயது முதிர்ந்தவர் என்பதாலும், உடல்நிலை காரணமாகவும் தரையில் கையை ஊன்றிதான் எழுந்திருக்க முடியும். அப்படி எழும்பும் போது தினமலர் நாளிதழ் எப்போதும் முஸ்லிம்களுக்கு எதிராக விஷமப்பிரச்சாரத்தில் ஈடுபடுவது போல, வேலூர் எம்.பி சாமி காலில் விழுந்தார் என செய்தி வெளியிட்டது. இதை கோவில் நிர்வாகமே உடனே �தினமலர்� அலுவலகத்தை தொடர்பு கொண்டு கண்டித்தது, �மணிச்சுடர்� நாளிதழிலும் செய்தி வெளியிடப்பட்டது.

அந்த புகைப்படத்தில் சாமியார் ஒரு பக்கம் பார்ப்பதையும், பேராசிரியர் வேறொரு பக்கம் நோக்குவதையும் காணலாம். உண்மை நிலை என்ன என்பதை உயிரோடு இருக்கும் சாமியாரிடமும், உடன் சென்ற முஹம்மது சகி உள்ளிட்டோரையும் கோட்கலாமே! தினமலர் நாளிதழ் நபி (ஸல்) அவர்களை பற்றியும், இஸ்லாத்திற்கு விரோதமாகவும் தொடர்ந்து விஷமப் பிரச்சாரம் செய்து வருவதை சமுதாயம் நன்கு அறியும். 07-09-2006 அன்று வேலூரில் இந்து முன்னணி சார்பில் ஒரு கூட்டம் நடைபெறுவதாகவும், அதனால் இந்து - முஸ்லிம் கலவரம் ஏற்பட்டு விடுமோ என்ற பதற்றம் நிலவியது. மக்களை அமைதி படுத்த வேண்டும் என்பதற்காக வேலூர் எம்.பி என்பதால் பேராசிரியர் கே.எம். கே. அங்கு நேரடியாக சென்று அமைதி படுத்தினார். கோவை செம்மொழி மாநாட்டில் பேராசிரியர் நிகழ்த்திய உரைகள் சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரை முழுவதுமாக புத்தகமாக வந்துள்ளது. படித்து உண்மையை தெரிந்து கொள்ளலாம்.

20-08-2005 வேலூர் தி.மு.க மாநாட்டில், """"தி.மு.க தவிர்த்து அனைத்து கட்சிகளிலும் சிறுபான்மை பிரிவு உண்டு; இந்திய முஸ்லிம்களின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் இயக்கமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருப்பதால் தி.மு.கவில் சிறுபான்மை பிரிவு இல்லை�� என்று பேசியதையும் திருத்தி விஷம பிரச்சாரம் செய்துள்ளனர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடுக ளில் ஆட்சியாளர்கள் பங்கேற்கின்றனர், கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன சமுதாய மக்கள் அலைகடலென திரண்டு வருகின்றனர், அதை அனைத்து பத்திரிக்கை களும் கலர் செய்தியாக வெளியிடுகின்றன. இதை தாங்க முடியாமல் மேலப்பாளையம் மாநாட்டில் அதை பேசினார், தாம்பரம் மாநாட்டில் இதை பேசினார் என புலம்பி மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் போல் உளரித் திரிபவர்களுக்காக நாம் அனுதாபப்படுவதை தவிர வேறென்ன செய்ய முடியும்? மேலப்பாளையம் முஸ்லிம் லீக் மாநாட்டில் சிறப்பு மலரின் அட்டைப்படமே காயிதெ மில்லத் மணி மண்டபம் என்பதும், தாம்பரம் மாநில மாநாட்டில் காயிதெ மில்லத் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் இந்த போலிகளுக்கு எப்படி தெரியும்?

அப்துல் ரஹ்மான் எம்.பி
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் முஸ்லிம் லீக் குடும்பத்தில் பிறந்தவர் எம்.அப்துல் ரஹ்மான். மாணவர் பருவம் முதல் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் கண்காணிப்பில் வளர்ந்து முஸ்லிம் லீக் கடைநிலை ஊழியராக இனம்காட்டி கொண்டவர். துபாய் சர்வதேச இஸ்லாமிய வங்கியில் துணைத் தலைவராக பணியாற்றியவர். ஏழை மாணவர்களுக்காக கல்வி உதவி புரியும் இந்திய முஸ்லிம் சங்கம் (ஈமான்) பொதுச் செயலாளராகவும் 1991 முதல் துபாய் காயிதெ மில்லத் பேரவையின் பொதுச் செயலாளராகவும் பணியாற்றியவர். துபாயில் இந்திய மக்களின் நலனில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி கொண்டவர். தமிழக முஸ்லிம் லீகின் எழுச்சிக்கும் - வளர்ச்சிக்கும் மிகப்பெரிய பங்களிப்பை செய்து வருபவர். தவறானவர்கள் இவரையும் தப்பாகதானே பேசுவார்கள்?

தாவூத் மியாகான்-கம்பெனி
காயிதெ மில்லத் பேரன் என்று சொல்லிக் கொள்ளும் எம்.ஜே. தாவூத் மியான்கான் முஸ்லிம் லீகின் கேரள தலைவர்களின் உதவியால் திருவனந்தபுரத்தில் பணியில் சேர்ந்தார். அதன் பின் முஸ்லிம் லீகர்களின் உதவியால் சவுதி அரேபியா தம்மாமில் வேலை கிடைத்தது. அன்று முதல் 2003 வரை தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் ஈடுபாடு கொள்ளாமல் இருந்தது மட்டுமல்லாமல் சரித்திரம் போற்றும் தலைவர்களான இப்ராஹிம் சுலைமான் சேட், குலாம் மஹ்மூது பனாத்வாலா, சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத், செய்யது முஹம்மது அலி ஷிகாப் தங்ஙள், பன்மொழிப் புலவர் எம்.ஏ. லத்தீப் உள்ளிட்ட அனைத்து தலைவர்களையும் குறை கூறுவதையும் சமுதாயத்தவர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதையும் வாடிக்கையாக கொண்டிருந்தார். 2003 வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தாவூத் மியாகான் என்பவரை யாருக்கும் தெரியாது. சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் ஸாகிபை பற்றி இவர் சொல்லிய குற்றச்சாட்டுகளுக்கு அளவே இல்லை, கடைசியாக இருக்க சொந்த வீடு இல்லாமல் தான் சிராஜுல் மில்லத் மறைந்தார். இடையில் சென்னை மாவட்டத்தில் மர்ஹும் எஸ்.ஏ. காஜா முகைதீன் உள்ளிட்டோர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது இவரும் அவர்களோடு சேர்ந்து போட்டி இயக்கம் கண்டார்.

1996 ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம் எஸ்.ஏ. காஜா முகைதீன், எம்.ஜே.தாவூத் மியாகான் உள்ளிட்டவர்கள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்ற பெயரையோ அல்லது அப்பெயருக்கு முன்பின் யாதொரு பெயரை சேர்த்தோ கட்சியின் பெயரை பயன்படுத்துவதற்கும், பிறை நட்சத்திரம் பதித்த பச்சை வண்ண கொடியை பயன்படுத்துவதற்கும், நிரந்தர தடை விதித்து உறுத்து கட்டளை பிறப்பித்தது.

1. That the defendants their men agents any body claiming under them be and are hereby restrained by permanant injunction from using the plaintiff party�s Flag by convening any meeting or in any other form or manner;

2. That the defendant be and is hereby restrained by permanant injunction from claiming to be a State Unit of the Indian Union Muslim League.

3. That the defendants or any body acting or claiming be and are hereby restrained by permanent injuction from using the plaintiff party�s name with slight variations either by pre fixing the State of Tamil Nadu or in any other Manner.

-இவைதான் நீதிமன்றம் அளித்த தடை

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்பது வாரிசு அடிப்படையில் தனக்கே சேர வேண்டும், தான் அதற்கு தலைவராக வேண்டும், தானே எம்.பி, எம்.எல்.ஏ ஆக வேண்டுமென வெறியில் திசை மாறிய பறவையாக இங்கும் அங்கும் உலா வந்து கொண்டிருந்தார். இந்த நிலையில் சில பெரியவர்களின் முயற்சியால் எம்.ஜி.தாவூதி மியாகான் , தலைவர் பேராசிரியர் கே.எம்.கே. அவர்களை சந்தித்து 2003 ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் இணைந்தார். பேராசிரியர் வாழ்த்தி பாராட்டி அவருக்கு காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர், அதன்பின் மாநில மஹல்லா ஜமாஅத் செயலாளர் பதவி கொடுத்தார். அப்போது கூட கட்சியை வளர்க்க வேண்டுமென்ற எண்ணம் தாவூத் மியாகானுக்கு தோன்றவில்லை, மீண்டும் 2004 பாராளுமன்ற தேர்தலில் எம்.பி யாக வேண்டும், வந்தவாசி கே.ஏ. வஹாப் மறைவிற்கு பின், தான் மாநில பொதுச் செயலாளராக ஆக வேண்டும் என நினைத்தார். இரண்டும் நடக்கவில்லை. பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வேலூர் தொகுதியில் தி.மு.க சின்னத்தில் போட்டியிட வே ண்டுமென இவரும் சேர்ந்து தான் கூட்டத்தில் முடிவுசெய்து விட்டு மீண்டும் குழப்பத்தில் ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அவர்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீகில் தேசிய துணைத்தலைவராக முஜாஹிதே மில்லத் ஜி.எம். பனாத்வாலா, கேரள தலைவர் செய்து முஹம்மதலி ஷிஹாப் தங்ஙள் ஆகியோர் தேர்ந்தெடுத்தனர். பிரிட்டன் பாராளுமன்றத்தால் போற்றப்பட்டவர் சட்டமேதை ஜி.எம். பனாத்வாலா சாகிப் இவர்களுக்கு தெரியாத சட்டங்களை அறிவுஜீவி போல் ஜி.எம். தாவூத் மியாகான் உளறி வருகின்றார்.

காயிதெ மில்லத் கல்லூரி
முஸ்லிம் மாணவர்கள் கல்வி பயில வேண்டும்! காயிதெ மில்லத் நினைவை போற்றிட ஒரு கல்லூரி அமைய வேண்டுமென்பதற்காக தமிழக முதல்வர் கலைஞர் அவர்களால் 1975-ம் ஆண்டு மேடவாக்கத்தில் 40 ஏக்கர் நிலம் கொடுக்கப்பட்டு முஸ்லிம் லீகின் அன்றைய மாநில தலைவர் திருச்சி அப்துல் வஹாப் ஜானி அவர்களை தலைவராக கொண்டு துவங்கப்பட்டதே மேடவாக்கம் காயிதெ மில்லத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. துவங்கப்பட்டு 35 வருடம் ஆகியும் தரமானகட்டிடங்கள், காம்பவுண்ட் சுவர் இல்லை. எம்.ஏ. லத்தீப் சாகிப் 1999ம் ஆண்டு தோழமையை மாற்றிக் கொண்ட போது அக்கல்லூரி நிர்வாகத்தை எம்.ஜி. தாவூது மியாகான் கைப்பற்றிக் கொண்டார். இன்று இக்கல்லூரியை தமது குடும்ப சொத்தாக மாற்றிவருகிறார். இக்கல்லூரி தோன்ற காரணமாக இருந்த 28 நிறுவன உறுப்பினர்களில் இன்றும் உயிருடன் இருக்கும் டாக்டர் யூ. முஹம்மது, இன்ஜினியர் மியாகான், ஹாஜி கே.எம். அப்துல் கனி, எஸ்.எம். கோதர் முகைதீன், (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்) , டாக்டர் நசீர் முஹம்மது ஆகியோர் சட்ட விரோதமாக நீக்கப்பட்டுள்ளனர். இன்று கல்லூரி நிறுவனம் முழுவதும் எம்.ஜி. தாவூத் மியாகான் குடும்பம் தான், இப்படி சமுதாயத்தின் சொத்தை களவாடி இருக்கின்றார்.

மொத்தம் உள்ள 40 ஏக்கரில் கட்டிட வசதிகள் செய்யாத காரணத்தால் அரசின் வனத்துறை காயிதெ மில்லத் கல்லூரியின் 30 ஏக்கர் நிலத்தை எடுத்துக் கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 1975 ஆண்டு ஆரம்பித்த கல்லூரியில் எந்த வசதியும் இல்லை, இன்றும் காடு போல் காட்சி அளிக்கின்றது இக்கல்லூரி நிர்வாகத்தை எம்.ஜி. தாவூத் மியாகான் தனதாக்கி தவறாக பயன்படுத்தி வருவதற்கு கல்லூரியில் ஆசிரியர்களும், நிர்வாகிகளும் வழக்கு தொடுத்துள்ளனர். கல்லூரி பணத்தில் கார் ஒன்று வாங்கி பின்பு அதை தன் பெயருக்கு மாற்றியுள்ளார். கல்லூரி மாணவர் சேர்க்கையில் நன்கொடை பெறப்பட்டது நிரூபிக்கப்பட்டுள்ளது. கல்லூரி விளையாட்டு மைதானம் வாடகைக்கு விட்டதில் மாதமாதம் கிடைத்த ரூபாய் 1 இலட்சம் என்ன ஆயிற்று? மாலை கல்லூரியில் வருடத்திற்கு ரூபாய் 95 இலட்சம் வரை கிடைக்கும் நிதி எங்கே? கல்லூரி பணத்திலிருந்து மாதாமாதம் போக்குவரத்து, தொலைபேசி, உணவு செலவுகள் என ரூபாய் 60 ஆயிரம் வரை எடுத்துக் கொள்வது முறையற்ற செயல் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கல்லூரியின் பேராசிரியர்களும் நிர்வாகிகளும் உரிமை குரல் எழுப்பி வருவதற்கு எம்.ஜி. தாவூத் மியாகான் என்ன பதில் சொல்ல போகின்றார்?

பலநூறு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சமுதாய சொத்தை சுரண்டல் பேர்வழியிடமிருந்து மீட்க வேண்டிய அவசியமும் கட்டாயமும் இன்று ஏற்பட்டு விட்டது.

காயிதெ மில்லத் அவர்களின் நினைவை போற்றக் கூடிய வகையில் தாய்ச்சபை தலைவர்கள் அரும்பணியாற்றி வருகின்றனர். இந்திய அரசாங்கத்தால் காயிதெ மில்லத் தபால் தலை வெளிவர காரணமாக இருந்தவர்கள் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாகிபும், மாண்புமிகு இ. அஹமது சாஹிபும் தான். சென்னையில் தமிழக அரசு சார்பில் �காயிதெ மில்லத் நினைவு மணி மண்டபம்�, முஸ்லிம் லீக் தலைமை நிலையமான �காயிதெ மில்லத் மன்ஸில்� அமையவும் காரணமாக இருந்தவர் தலைவர் பேராசிரியர் கே.எம்.கே.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசு சார்பில் காயிதெ மில்லத் நூற்றாண்டு விழாக்கள் நடைபெற காரணமாக இருந்தவர்கள் சிராஜுல் மில்லத் அவர்களும், தலைவர் பேராசிரியர் அவர்களும் தான் என்பதை சரித்திரம் சொல்லும்.

மூச்சுக்கு முன்னூறு முறை காயிதெ மில்லத் பேரன் என உச்சரிக்கும் எம்.ஜி. தாவூத் மியாகான் காயிதெ மில்லத் அவர்கள் வாழ்ந்த வரலாற்று சிறப்பிற்குரிய இல்லம் குரோம்பேட்டை `தயா மன்ஸிலை விற்று விட்டார். இந்த கொடுமையை யாரிடம் சொல்வது?

இன்று தாவூத் மியாகானுடன் இருந்து ஜாலரா போடுபவர்கள், முஸ்லிம் லீகின் அமைப்பு தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள், கல்லூரியில் இடம் அளிக்கப்பட்டவர்கள், நிர்வாகத்தில் பதவி தருவதாக சொல்லப் பட்டவர்கள், ஆட்சியாளர்களுடன் புகைப்படம் எடுக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறப்பட்டவர்கள் தான். சமுதாயம் இவரை நன்றாக புரிந்து வைத்திருக்கின்றது. நீதி மன்றத்தில் தனக்கு சாதகமாக தீர்ப்பு வரப்போகின்றது என 2004 வருடம் முதல் கடந்த 7 வருடங்களாக தன்னுடன் இருப்பவர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் , காவல்துறைக் கும் அவ்வப்போது சொல்லி கொண்டுதான் இருக்கின்றார். ஒன்றும் நடக்க போவது இல்லை.

தேர்தலுக்கு தேர்தல் தன் சுயநலத்திற்காக அணி மாறுவதும் தாவூத் மியாகானின் வாடிக்கை 2006 -ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கலைஞர் அவர்களை எதிர்த்து போட்டியிட வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க இவரை பயன்படுத்தி கொண்டது. 2009 ம் வருடம் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனக்கு சீட் தராததால் தேர்தல் வேட்புமனு தாக்கலான பின் தி.மு.க பக்கம் வந்தார். இவருக்கு என்ன கொள்கை? கல்லூரி பதவியை காப்பாற்ற இன்று தி.மு.க ஆதரவு, நாளை மாற்று அணி தாவுவதாக தகவல்.

பெயரில் குழப்பமா?
இந்திய சுதந்திரத்திற்கு பின் இயக்கம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பெயரில் இயங்கினாலும் காயிதெ மில்லத் அவர்கள் காலத்தில் கூட தமிழ்நாட்டில் தமிழ்நாடு ராஜ்ஜிய முஸ்லிம் லீக், முஸ்லிம் லீக் கேரள மாநில குழு என்றும் பாராளுமன்ற பதிவேட்டில் கூட காயிதெ மில்லத் உள்ளிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்களை வெறுமனே முஸ்லிம் லீக் என்றும் சுயேச்சை உறுப்பினர் என்றும் தான் இன்றளவும் பதிவு செய்திருக்கின்றனர். அரசியல் கட்சிகளை கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டுமென சட்டம் 1989 ஆம் ஆண்டு வந்தபோது கேரளாவிலும் ஆட்சியில் இருந்த காரணத்தால் 1989 ஆண்டே எந்த பெயரில் செயல்பட்டார்களோ அந்த பெயரிலேயே முஸ்லிம் லீக் கேரள மாநில குழு என்று பதிவு செய்தனர். தமிழகத்தில் தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (கூசூளுஐருஆடு) என்று இருந்த போதிலும் கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் அமைப்பு சட்ட திட்டங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அங்கம் என்பது விதியாக்கப்பட்டுள்ளது. இந்த பெயரில் இயங்கும் போது தான் தாவூத் மியாகான் தலைவர் பேராசிரியரை சந்தித்து மீண்டும் தாய்ச்சபையில் இணைந்தார்.

வெற்றி நமதே
அகில இந்திய அளவில் 1991 -ம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முறையாக பதிவு செய்யப்பட்டது. தற்போது இந்தியா முழுவதும் தாய்ச்சபையின் கட்டமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

வேலூர் எம்.பி தேர்தலில் வெற்றியை எதிர்த்து போடப்பட்ட 16 வழக்குகளை முறியடித்து வெற்றி கொண்டவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும், தமிழகத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன். இரண்டாவது முறையாக மத்திய அமைச்சராக பொறுப்பேற்று சிறப்பிற்குரிய பணியாற்றி வருபவர் நம் தேசிய தலைவர் இ. அஹமது சாகிப், அரசியலிலும் ஆன்மீக நெறியிலும் சிறந்து விளங்குபவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழித்தோன்றல் நம் கேரள தலைவர் சையது ஹைதர் அலி சிஹாப் தங்ஙள், இப்படிப்பட்ட தலைவர்களால்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழி நடத்தப்படுகிறது இவர்கள் தலைமையின் கீழ் தூய்மையான உள்ளத்துடன், உறுதியான நம்பிக்கையுடனும் சமுதாய அரசியல் பணியாற்றுபவர்களாக தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தோழர்கள் பணியாற்றி வருகின்றனர்.

எவரது பிரச்சாரங்களும் லட்சியவாதிகளின் உறுதியை குலைத்து விட முடியாது; பணிகளை தடுத்து விட முடியாது.

குழப்பவாதிகளை இனங்காண்போம்! உள்ளத்தூய்மையோடு பணியாற்றுவோம்

வெற்றி நமதே! நாளையும் நமதே!!

இந்திய யூனியன் முஸ்லிம் லீகும்

பச்சிளம் பிறைக் கொடியும் நமதே! 

சமுதாய நலன் நாடும்-
காயிதெ மில்லத் நற்பணி மன்றம்
சென்னை - 600 001.

http://muslimleaguetn.com/news.asp?id=2106

-

No comments: