Monday, January 3, 2011

முஸ்லிம் லீக் நம் சொத்து !

உலகில் வாழும் மனிதர்களில் அல்லாஹ்வின் அமானிதத்தை பாதுகாக்கின்ற வகையிலே வாழ்கின்ற மக்களை முஸ்லிம்கள் என்கிறோம். இந்த அடிப்படையில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களின் அரசியல் இயக்கமே இந்திய யூனியன் முஸ்லிம் லீக். இதைத்தான் கண் ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்கள் இதனை தோற்றுவித்த நாளிலேயே ""முஸ்லிம் லீக் அல்லாஹ்வுடைய ஒரு அமானிதம்"" என்றார்கள் அமானிதம் என்றாலே நம்பி ஒப்படைக்கப்பட்டது என்ற பொருளாகிறது. அது மட்டுமல்லாமல் அமானிதம் என்பது ஒரு அரபுச் சொல்லாக இருந்தாலும் அகண்ட-மா-நிலத்தில்-வாழும்-மானிடம்-நிதம் பாதுகாக்க வேண்டிய ஒரு நீதம் என்ற அர்த்தத்தையும் தமிழ் நெறியையும் உணர்த்தும் ஒரு தமிழ் சொல்லாகவும் இது அமைந்துள்ளது இதனால்தான், இதனை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் ""வாழ்க்கையையே வணக்கமாகவும், வணக்கத்தையே வாழ்க்கையாகவும்"" கொண்டிருக்கிறார்கள். அவர்களது இந்த ""வணக்க வாழ்வை"" பாதுகாக்கும் ஒரு அரசியல் அமைப்பாகவே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருந்து வருகிறது கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களும் அவர்களது காலத்து சமகால தலைவர்களும், தொண்டர்களும் அவர்களுக்கு பின்னால் வந்த தலைவர்களும், தொண்டர்களும், மார்க்க அறிஞர் களும், சமுதாயப் புரவலர்களும், தொண்டர்களும் இந்த நாட்டின் கோடிக்கணக்கான மக்களும் சேர்ந்து, காத்து வளர்த்து வரும் இயக்கமாக இந்த நாட்டில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இயக்கம் இருந்து வருகின்ற காரணத்தி னால்தான் இதனை இன்றைக்கு தலைமை தாங்கி வழி நடத்துகின்ற நம் கண்ணியத்திற்குரிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியப் பெருந்தகை கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் முஸ்லிம் லீக் ""ஒரு சமுதாயத்தின் பொது சொத்து"" என்பதை பிரகடனப்படுத்தி அதனை நடைமுறைபடுத்தியும் வருகிறார்கள் > சமீபத்தில் தமிழக அரசின் திருமண பதிவுச்சட்டத்தில் இஸ்லாமியர்களுக்கான விஷேச நடைமுறைகள் ஏற்கனவே அவர்கள் பின்பற்றி வருகின்ற பதிவு முறைகளை ஏற்றுக்கொள்ளுதல் போன்ற அரசாணைகளை பெறுவதற்கு முஸ்லிம் லீக் அதன் தலைமையில் இஸ்லாமிய சமுதாயத்தின் இயக்கங்களை ஒன்று கூட்டி அதில் வெற்றியும் பெற்றது இந்த நிகழ்வால் மூன்று விஷயங்கள் நிரூபிக்கப் பட்டுள்ளது 1. சமுதாயத்திற்காக அனைவரும் ஒன்று படமுடியும் என்பது 2. அந்த ஒற்றுமையால் நமது உரிமைகளை அரசியல் மற்றும் அரசாங்கத்திடமிருந்து பெறமுடியும் என்பது. 3. முஸ்லிம் லீக் சமுதாய பிரச்சனைகளை தீர்த்துவைப்பதில் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தாய்ச்சபையாக தொடர்ந்து திறந்த மனதோடு செயல்படுகிறது என்பது மேலும் கடந்த டிசம்பர்-11-2010 சென்னை தாம்பரம் முஹல்லாஜமாத் ஒருங்கிணைப்பு கருத்தரங்கு, பிறைக்கொடி பேரணி, சமய நல்லிணக்க விருது வழங்கு விழா என்று உலகமே வியக்கும் வண்ணம் நடைபெற்ற பிரம்மாண்ட மாநில மாநாடும் அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் தரப்பட்ட தீர்வுகளும், அரசாணைகளும் முஸ்லிம் லீக் இன்றும் அல்லாஹ்வுடைய ஒரு அமானிதமாக-சமுதாயத்தின் பொது சொத்தாக இருந்து வருவதை நிரூபித்துள்ளது. இந்த நற்செய்தியை, இந்த மாநாடு நாட்டு மக்கள் அனைவருக்கும் பகிரங்கமாக பிரகடனப்படுத்தியுள்ளது ""முஸ்லிம் லீகை ஏதோ எங்கள் வயிற்றுப்பிழைப்புக்காக நாங்கள் நடத்தவில்லை. இது சமுதாயத்தின் இயக்கம் யாருடைய சுய நலனுக்காகவோ அல்லது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்காகவோ உள்ள இயக்கம் அல்ல. எனவே சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும், இயக்கங்களும் இந்த முஸ்லிம் லீகில் வந்து பணியாற்றுங்கள், ஒன்றுபட்டு வலிமைப்படுத்துங்கள். அதன் மூலம் ஒட்டு மொத்த சமுதாயத்தையும் வலிமைப்படுத்துங்கள். அப்படி வலிமைப் படுத்துவதனால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்களையே நீங்கள் வலிமைப்படுத்திக் கொள்ளுங்கள்"" என்ற தலைவர் முனீருல் மில்லத்தின் மாநாட்டு தலைமை உரை இதனை பறை சாற்றும் விதமாக அமைந்துள்ளது எனவே முஸ்லிம் லீக் என்பது யாருடைய தனி உடமையல்ல. சமுதாயத்திற்கு சொந்தமான பொதுவுடமை. முஸ்லிம் லீக் ஒரு பள்ளிவாசலைப் போன்றது. இதில் பணியாற்றுபவர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு கிடையாது இங்கு அனைவரும் சமம். பள்ளிவாசல் வழிபாட்டுத் தலம் முஸ்லிம் லீக் வழிகாட்டும் களம். சமுதாயப் பணியாற்றும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு அவரவர்களுக்கு இயன்ற வகையில் உடல், பொருள், சிந்தனையை தந்து முஸ்லிம் லீகில் உழைக்கிறார்கள், அல்லாஹ் நாடியதை அவரவர்கள் பெறுகிறார்கள். இந்த இறைப்பணியை நிறைபணியாக ஏற்று வாழ்பவர்களே முஸ்லிம் லீகர்கள். ஏனென்றால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூய முஸ்லிம்களால் காலங்காலமாக இயக்கப்படும் அல்லாஹ்வின் அமானிதம்-சமுதாயத்தின் சொத்து. முஸ்லிம் லீக் எல்லோராலும் உருவாக்கப்பட்டு நடத்தப்படுகின்ற முஸ்லிம் சமுதாயத்தின் இயக்கம் என்பதால் முஸ்லிம் சமுதாயத்தை சார்ந்த யாருமே இதனை விட்டு விலகியிருக்கக்கூடாது. இது யாருடைய தனிப்பட்ட கட்சியும் அல்ல, தனியார் சொத்தும் அல்ல. நம் ஒவ்வொருவருடைய கட்சி. முஸ்லிம் லீக் இந்த சமுதாயத்தின் சொத்து இந்த அமானிதத்தை அல்லாஹ்வுக்காகவும் அவனது ரசூலுக்காகவும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு. இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உள்ளது. இந்த ஈமான் உணர்வுகளோடு முஸ்லிம் லீகில் என்றென்றும் ஒன்றுபட்டு பாடுபடுவோம்!



Best regards,
A.Abdul Rahim
Kuwait
Mobile: 00965-66345333