Friday, March 4, 2011

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 64-வது நிறுவன தினம்: பேராசிரியர் தலைமையில் பிரமாண்ட விழா..

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 64-வது நிறுவன தினம்: பேராசிரியர் தலைமையில் மார்ச் 10-ல் சென்னை திருவல்லிக்கேணியில் பிரமாண்ட விழா துரைமுருகன், தங்கபாலு, ஜி.கே.மணி, திருமாவளவன் பங்கேற்கின்றனர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 64-வது நிறுவன தினமான மார்ச் 10-ம் தேதி வியாழக்கிழமை சென்னை சேப்பாக்கம் வாலாஜா பள்ளி எதிரில் உள்ள சி.எம்.கே. சாலையில் பிரம்மாண்டமான விழா பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெறுகிறது. இதில் அமைச்சர் துரைமுருகன், கே.வீ. தங்கபாலு, ஜி.கே. மணி, திருமாவளவன் உள் ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின் றனர்.

இவ் விழாவில் சிறந்த கல்வியாளருக்கான விருது பி.எஸ். அப்துர் ரஹ்மான் அப்துல் காதர், சிறந்த இலக்கியவாதிக்கான விருது பேராசிரியர் மு. சாயபு மரைக்காயர், சிறந்த சமூக சேவகருக்கான விருது டாக்டர் சையத் கலீபத் துல்லாஹ் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வருடாந்திர சேவை திட்டங்களாக மார்ச் 10 நிறுவன தினம், ஜூன் 5 காயிதெ மில்லத் பிறந்த நாள், கல்வி எழுச்சி நாள், அக்டோபர் 4 சிராஜுல் மில்லத் பிறந்த நாள் - சமய நல்லிணக்க விருது வழங்கும் நாள், டிசம்பர் 30 மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு தினம் என அனுசரிக்கப் பட்டு வருகிறது.

இ.யூ. முஸ்லிம் லீக்

நிறுவன நாள் 1948-ம் வருடம் மார்ச் மாதம் 10ம் தேதி சென்னை ராஜாஜி மண்டபத்தில் கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் அவர்க ளால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துவக்கப்பட் டது. அதனை நினைவு கூரும் வகையில் ஒவ் வொரு ஆண்டும் மார்ச் மாதம் 10-ம் தேதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவன தினம் அனுஷ்டிக் கப்படுகிறது.

கடந்த ஆண்டு இந் நாளை முன்னிட்டு நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் சமுதாய மறுமலர்ச்சி மாநாடு நடத்தப்பட்டு விருதுகள் வழங்கப்பட் டன. அதில் மத்திய உரம் மற்றும் ரசாயன அமைச் சர் மு.க. அழகிரி பங்கேற் றார்.

அதற்கு முந்தைய ஆண்டு சென்னை கலை வாணர் அரங்கில் இந் நாளை முன்னிட்டு மறைந்த நம் தேசியத் தலைவர் குலாம் மஹ்மூது பனாத்வாலா நாடாளு மன்றத்தில் ஆற்றிய அற்புத மான உரைகள் ஆங்கி லத்தில் தொகுக்கப்பட்டு அது நூலாக வெளியிடப் பட்டது.

நம் தேசியத் தலைவர் இ. அஹமது, தமிழக அமைச் சர் ஆற்காடு வீராசாமி, தி.க. தலைவர் கி. வீரமணி, காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விருதுகள்

இந்த ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 64-வது நிறுவன தினத்தை முன்னிட்டு சென்னையில் நிகழ்ச்சிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வரு கின்றன. 

இந்த ஆண்டு `சிறந்த கல்வியாளருக்கான விருது� பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக் கழகத்தின் வேந்தர் அப்துர் ரஹ்மான் அப்துல் காதருக்கும், `சிறந்த இலக்கியவாதிக்கான விருது� காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயருக் கும், `சிறந்த சமூக சேவக ருக்கான விருது� மருத்துவ மாமேதை டாக்டர் செய்யது கலீபத்துல்லாஹ் சாஹிபுக்கும் வழங்கப்படு கிறது. 

10-3-2011 அன்று மாலை சரியாக 5 மணிக்கு சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள வாலாஜா மஸ்ஜித் காயிதெ மில்லத் நினைவிடத்தில் ஜியாரத் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து அப் பள்ளியின் எதிரில் உள்ள சி.என்.கே. சாலையில் பிரம்மாண்ட விழா நடை பெறுகிறது. 

பங்கேற்போர்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் மாநில துணைத் தலைவர் கள், மாநிலச் செயலாளர் கள், மாநிலப் பொருளா ளர் முன்னிலையில் நடை பெறும் இப் பொதுக்கூட் டத்தில் தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், தமிழக சட்ட அமைச் சருமான துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வீ. தங்கபாலு, பாட் டாளி மக்கள் கட்சி தலைவர் கோ.க. மணி, விடுதலைச்சிறுத்தைகள் தலைவர் தொல். திருமா வளவன் உள்ளிட்ட தோழமை கட்சித் தலை வர்கள் சிறப்புரையாற்று கின்றனர்.

இக் கூட்டத்தில் தென் சென்னை, வடசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் வடக்கு - தெற்கு, திருவண்ணாமலை, வேலூர் கிழக்கு - மேற்கு உள்ளிட்ட மாவட்டங் களின் செயல் வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தென் சென்னை மாவட்டத் தலைவர் கே.பி. இஸ்மத் பாஷா, செயலாளர் பூவை முஸ்தபா, பொருளாளர் மடுவை எஸ். பீர் முஹம் மது, சேப்பாக்கம் பகுதி செயலாளர் ஆலம்கான் உள்ளிட்ட நிர்வாகிகள் மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர். 

மேற்கண்ட தகவலை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச்செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூ பக்கர் தெரிவித்துள்ளார்.
 

No comments: